For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

பறவையா? தடுப்புச்சுவரா? : தென் கொரியா விமான விபத்திற்கு காரணம் என்ன?

07:05 PM Dec 31, 2024 IST | Murugesan M
பறவையா  தடுப்புச்சுவரா    தென் கொரியா விமான  விபத்திற்கு காரணம் என்ன

தென்கொரியாவில் 179 பேரை பலி வாங்கிய விமான விபத்துக்கு ஓடுபாதையின் எல்லையில் இருந்த கான்கிரீட் தடுப்புச் சுவர் தான் காரணமா? என விமானத் துறை வல்லுநர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

தென் கொரியாவின் குறைந்த கட்டண விமான நிறுவனமான 'ஜேஜூ ஏர்' 2005-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

Advertisement

அண்மையில் விபத்துக்குள்ளான 7C2216 என்ற விமானம், இந்நிறுவனத்தின் 15 ஆண்டுகள் பழமையான போயிங் 737-800 ரக விமானமாகும்.

தென் கொரியாவின் சியோலுக்கு தெற்கே 290 கிலோமீட்டர் தொலைவில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தை கடந்த ஞாயிற்றுக் கிழமை வந்தடைந்தது.

Advertisement

'பறவைகள் விமானத்தில் மோதுவதற்கான வாய்ப்பு உள்ளது என்ற விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, விமானம் தரையிறங்கும் முயற்சி நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நேரத்தில் விமானத்தின் மீது பறவை மோதியதால் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் லேண்டிங் கியர் செயல்படாமல் போனது. இதனால் வழக்கமான தரை இறக்கம் செய்யமுடியாமல் போனது.

அவசரகால பேரழிவு சமிக்ஞையான Mayday என விமானி அறிவித்ததை அடுத்து, விமானத்தை எதிர் திசையில் இருந்து தரையிறக்க விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையம் அனுமதி அளித்தது.

லேண்டிங் கியர் செயல்படாத போது விமானத்தின் சக்கரங்கள் வெளியில் வராது. ஆகவே பெல்லி லேண்டிங் முறையில் விமானத்தைத் தரையிறக்க விமானி முடிவு செய்தார்.

பெல்லி லேண்டிங் என்பது, விமான சக்கரங்கள் வெளியே வராத சமயத்தில், விமானத்தின் முன்பகுதியை தரையில் உரசி விமானத்தை நிறுத்துவதாகும்.

மாற்று ஓடுபாதையில் விமானம் தரையிறங்கியதுமே கட்டுப்பாட்டை இழந்து, சறுக்கிய படியே ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்று கான்கிரீட் தடுப்பு சுவரில் மோதி வெடித்துச் சிதறி தீப்பிடித்தது.

சமூக ஊடகங்களில் வைரலான வீடியோவில்,விமானம் சறுக்கிக்கொண்டே ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்று சுவரில் மோதுவதும் பின்னர் விமானம் தீப்பிடிப்பதும் தெரிகிறது. மேலும் இன்னொரு வீடியோவில், சக்கரங்கள் ஏதும் வெளிவராத சூழலில் தரையிறங்கும் விமானம் சறுக்கிக் கொண்டே ஓடுபாதையில் இருந்து விலகிச் செல்லும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

பொதுவாக, நிலையான ஓடுபாதையின் பாதுகாப்பு பகுதிகள் ஓடுபாதையின் எல்லையைத் தாண்டி 1,000 அடி நீளமாகவும், பக்கவாட்டில் 500 அடி நீளமும் இருக்க வேண்டும் என்றும், இந்த ஓடு பாதை பகுதிகளுக்குள் இருக்கும் எந்தவொரு கட்டமைப்பும் எளிதில் நொறுக்கக்கூடியதாக இருக்க வேண்டும் என்றும் சர்வதேச சிவில் ஏவியேஷன் அமைப்பு கூறுகிறது.

முவான் விமான நிலையத்தில், ஓடுபாதையின் முடிவில் இருந்து சுமார் 250 மீட்டர் தொலைவில் மண் மேடு சூழ்ந்த கான்கிரீட் தடுப்புச் சுவர் இருந்ததே விபத்துக்குக் காரணம் என்று குற்றஞ்சாட்டப் படுகிறது.

இந்தச் சூழலில்,தென் கொரிய அரசு விதிமுறைகளின் படியே, ஆண்டெனா நிறுவப்பட்ட கான்கிரீட் தடுப்புச் சுவர் கட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், விமானப் பாதுகாப்புக்கான கொரியா சங்கத்தின் தலைவரான ஹ்வாங் ஹோ-வான், ஆண்டெனாவை கான்கிரீட் சுவரில் வைத்ததே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறியிருக்கிறார்.

விமான நிலையத்தின் வடிவமைப்பு காப்பு மற்றும் விபத்துக்குக் கான்கிரீட் சுவர் காரணமா ? என்பது பற்றிய விவாதம் தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில், விபத்து நடந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்ட இடைக்கால அதிபர் சோய் சாங்-மோக், நாட்டின் ஒட்டுமொத்த விமான உள்கட்டமைப்புகளையும் பரிசோதனைக்கு உட்படுத்த உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Advertisement
Tags :
Advertisement