செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

பறவை காய்ச்சல் பாதிப்பு - அமெரிக்காவில் முதியவர் உயிரிழப்பு!

02:30 PM Jan 07, 2025 IST | Murugesan M

அமெரிக்காவில் முதல் முறையாக பறவை காய்ச்சல் பாதிப்பு காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Advertisement

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் வசித்து வந்த 65 வயது முதியவர் பறவை காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதிக தொற்றும் தன்மை கொண்ட எச்5என்1 ரக வைரசின் தாக்குதலுக்கு ஆளான அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக லூசியானா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், காட்டு பறவைகள் மற்றும் வளர்ப்பு பறவைகளுடன் தொடர்பில் இருந்ததால் அவருக்கு தொற்று ஏற்பட்டதாகவும், வேறு யாருக்கும்  தொற்று ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement
Tags :
MAINUnited Statesbird fluLouisianaLouisiana Department of Health
Advertisement
Next Article