பலவீனமான கட்சிகள் மட்டுமே தவெக-வை கூட்டணிக்கு அழைக்கின்றன - அண்ணாமலை விமர்சனம்!
09:44 AM Jan 19, 2025 IST | Sivasubramanian P
பலவீனமான கட்சிகள் மட்டுமே விஜய்யை கூட்டணிக்கு அழைப்பதாக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
Advertisement
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விஜய் மீது வைக்கும் நம்பிக்கையில் 10 சதவீதமாவது ராகுல்காந்தி மீது வைக்க வேண்டும் என தெரிவித்தார் .
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்த வேலையை செல்வப்பெருந்தகை செய்வதாகவும், விஜய் முதலமைச்சர் ஆனால் அவரை மக்கள் எப்படி சென்று சந்திப்பார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
Advertisement
பாஜக வளர்ந்து கொண்டிருப்பதாகவும், யாரையும் கூட்டணிக்கு அழைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், மக்கள் துன்புறுத்தலுக்கு ஆளாக கூடாது என்பதால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இருந்து பாஜக விலகியுள்ளதாகவும் அண்ணாமலை குறிப்பிட்டார்.
Advertisement