செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

பல்லடம் மூவர் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் - முதல்வருக்கு அண்ணாமலை கடிதம்!

06:30 PM Dec 06, 2024 IST | Murugesan M

பல்லடம் மூவர் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது :

கடந்த நவம்பர் மாதம் 28 ஆம் தேதி அன்று. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சேமலைக் கவுண்டம்பாளையத்தில், மர்ம கும்பலால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சகோதரர் செந்தில் குமார் அவர்களது இல்லத்துக்கு இன்று நேரில் சென்று. அவரது மனைவி மற்றும் குழந்தைகளை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தோம்.

Advertisement

தாய், தந்தை, மகன் என ஒரே நாளில், எந்தத் தவறும் செய்யாத மூன்று பேரை தங்கள் குடும்பத்தில் இழந்து, பெரும் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அந்தக் குடும்பத்தினருக்கு, தற்போது கிடைக்கும் ஒரே ஆறுதல் இத்தனை கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைவாகக் கண்டறிந்து, சட்டத்தின்படி கடுமையான தண்டனை வாங்கித் தருவது மட்டுமாகத்தான் இருக்க முடியும்.

ஆனால், குற்றம் நடந்து இன்றுடன் 9 நாட்கள் கடந்தும், தமிழகக் காவல்துறை 14 தனிப்படைகள் அமைத்தும், குற்றவாளிகள் குறித்த விவரம் எதுவும் தெரியவில்லை. வழக்கு விசாரணையிலும் குறிப்பிடத்தகுந்த எந்த முன்னேற்றமும் இருப்பதாகத் தெரியவில்லை.

இத்தனை கொடூரமான ஒரு கொலைச் சம்பவம் நிகழ்ந்தும், குற்றவாளிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது, இந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அனைவருக்கும் அச்ச உயர்வை ஏற்படுத்தியிருக்கிறது.

அதுமட்டுமின்றி, கடந்த ஆண்டுகளில், நாமக்கல், சென்னிமலை, பல்லடம் போன்ற பகுதிகளில் நடைபெற்ற இதே போன்ற கொலைச் சம்பவங்களிலும், குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரியவில்லை என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

காவல்துறை போன்ற அரசு இயந்திரங்கள் மீது பொதுமக்கள் நம்பிக்கை இழப்பது. ஜனநாயகத்தின் உண்மையான கேள்விக்குறியாக்கி விடும். கட்டமைப்பையே தமிழகக் காவல்துறையினரின் திறமை மீது. யாருக்கும் எந்த சந்தேகமோ, கேள்விகளோ இல்லை.

ஆனால், தமிழகக் காவல்துறையினருக்கு இருக்கும் கட்டுப்பாடுகளோ தொழில்நுட்ப வசதி குறைபாடுகளோ, வழக்கு விசாரணை முன்னேற்றத்தில் தாமதத்தை ஏற்படுத்துகிறதோ என்ற கேள்வியை எழுப்புகிறது.

மேலும் இந்த வழக்கில் ஏற்படும் ஒவ்வொரு நாள் காலதாமதமும், குற்றவாளிகள் தப்பிக்க வாய்ப்பு அளிப்பதாக இருப்பதையும் நாம் மறந்து விடக் கூடாது. இந்த வழக்கை, இந்த ஒரு குற்றத்தின் அடிப்படையில் மட்டுமே விசாரிக்காமல், கடந்த சில ஆண்டுகளாக இந்தப் பகுதிகளில் நடந்த இதே போன்ற குற்றங்களின் தொடர்ச்சியாக விசாரிப்பது. விசாரணையில் முன்னேற்றத்தைக் கொடுக்கும் என்பது எங்கள் கருத்து.

குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடித்து, சட்டத்தின் முன் நிறுத்துவதே. நம் அனைவரின் ஒருமித்த நோக்கமாக இருக்கிறது. எனவே, வழக்கு விசாரணையைப் புதிய கோணத்தில் அணுகும் விதமாகவும், எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லாத துரிதமான விசாரணை நடைபெறவும், இந்த வழக்கை, தமிழக அரசே சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Advertisement
Tags :
FEATUREDMAINannamalaistalincbi enquirypalladam murder case
Advertisement
Next Article