பல்லடம் அருகே மூவர் கொலை - குடும்பத்தினரை நேரில் சந்தித்து அண்ணாமலை ஆறுதல்!
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அண்மையில் தாய், தந்தை, மகன் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவர்களது குடும்பத்தினரை சந்தித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆறுதல் கூறினார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த பொங்கலூர் சேமலை கவுண்டன் பாளையத்தை சேர்ந்த தெய்வசிகாமணி, அவரது மனைவி அலமேலு, மகன் செந்தில்குமார் ஆகிய 3 பேர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.
அப்போது உயிரிழந்த செந்தில்குமாரின் மனைவி, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என வேதனையுடன் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது என தெரிவித்தார். மேலும் இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டுமென வலியுறுத்தினார்.