பல்லடம் : 10-ம் வகுப்பு வகுப்பறைக்குள் மனித கழிவுகள் வீசப்பட்ட கொடூரம்!
05:09 PM Jan 29, 2025 IST
|
Murugesan M
பல்லடம் அருகே அரசு பள்ளி வகுப்பறைக்குள் மனித கழிவுகளை மர்மநபர்கள் வீசிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
காமநாயக்கன்பாளையத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில், சுமார் 200 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளி வகுப்பறைகளை ஆசிரியர்கள் வழக்கம்போல் திறந்து உள்ளனர்.
அப்போது பத்தாம் வகுப்பு வகுப்பறையில் சுவர் மற்றும் மாணவர்கள் அமரும் இருக்கைகளில் மனித கழிவுகள் வீசப்பட்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
Advertisement
வகுப்பறையில் ஆய்வு மேற்கொண்ட போலீசார், இச்செயலை செய்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement