பல கால அடக்குமுறைக்கு பிறகு சிரியாவுக்கு கிடைத்த நீதி!
சிரியா அதிபர் பஷார் அல்- அசாத் நாட்டில் இருந்து வெளியேறிய நிலையில், அதனை பல நாட்டின் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.
சிரியாவில் பஷார் அல்- அசாத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்திருப்பது, பல கால அடக்குமுறைக்கு பிறகு அந்நாட்டுக்கு கிடைத்த நீதி என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். மேலும், மத்திய கிழக்கிற்கு இது ஒரு சவாலான காலம் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேபோல, அசாத்தின் வீழ்ச்சி, சிரியாவில் பல கால மிருகத்தனமான அடக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக கனடா அதிபர் ஜஸ்டின் டிரூடோ தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அசாத் வெளியேறியதால், பயங்கரவாதம் மற்றும் அடக்குமுறை இல்லாத வாழ்வை மக்கள் இனி வாழ தொடங்கலாம் எனவும் பதிவிட்டுள்ளார்.
சிரியாவில் அதிபர் பஷார் அல்-அசாத்தின் இரண்டு சகாப்த கால ஆட்சி வீழ்ச்சியடைந்திருப்பது, மத்திய கிழக்கின் வரலாற்று நாள் என இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். அசாத்தின் வீழ்ச்சி மக்களுக்கு பெரும் வாய்ப்பை அளித்தாலும், அதில் பல ஆபத்துகளும் நிறைந்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.