செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

பல வழக்குகளில் காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில்லை - உயர் நீதிமன்றம் கண்டனம்!

02:49 PM Jan 30, 2025 IST | Sivasubramanian P
featuredImage featuredImage

காவல்துறையினர் குற்றப்பத்திரிகையை நீதிமன்றங்களில் தாக்கல் செய்யாமல் இருப்பது தமிழக உள்துறை செயலாளருக்கு தெரியுமா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Advertisement

சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கொலை மிரட்டல் வழக்கில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தபோது, 2015 ம் ஆண்டு பதியப்பட்ட இந்த வழக்கு, அப்போதே முடித்து வைக்கப்பட்டதாகவும், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை ஏதும் தாக்கல் செய்யப்படவில்லை எனவும் காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

Advertisement

இதையடுத்து, காவல் துறையினர் பதிவு செய்யும் வழக்குகளில் புலன் விசாரணை முடிந்த பின், சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் இருப்பது இது முதல் வழக்கல்ல என்றும், தமிழகம் முழுவதும் பல வழக்குகளில் காவல்துறையினர் குறித்த காலத்திற்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வதில்லை எனவும் நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.

இதனால் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி சம்பந்தப்பட்டவர்கள் உயர்நீதிமன்றத்தை நாடும் நிலை ஏற்படுவதாகவும், நீதிமன்றத்தை நாட இயலாத ஏழை மக்கள், நீதியைப் பெற போராட வேண்டியுள்ளதாகவும் நீதிபதி வேதனை தெரிவித்தார்.

வழக்குப்பதிவு செய்யக் கோரியும், இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரியும் வழக்குகள் தாக்கல் செய்யப்படுவது, காவல்துறையினர் விதிமுறைகளை பின்பற்றுவதில்லை என்பதை காட்டுவதாக நீதிபதி குற்றம்சாட்டினர்.

காவல்துறையின் இந்த சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து உள்துறை செயலாளருக்கு தெரியுமா எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, நாளை நேரில் ஆஜராக உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.

Advertisement
Tags :
FEATUREDhighcourt condemnmadras high courtMAINnot filing charge sheets in the courtsTamil Nadu Home Secretary
Advertisement