செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

பள்ளி சீருடை அணிந்தபடி பாத்திரங்கள் கழுவும் மாணவர்கள்!

04:29 PM Nov 12, 2024 IST | Murugesan M
featuredImage featuredImage

உதகையில் தனியார் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் பள்ளி சீருடையில் பாத்திரங்களை கழுவும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

Advertisement

வால்சம் சாலையில் பிரபல தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், இந்த பள்ளியில் பயிலும் மாணவர்கள் சிலர், பள்ளி சீருடை அணிந்தபடி தட்டு உள்ளிட்ட பாத்திரங்களை கழுவும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

Advertisement

கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி கற்று கொடுப்பதை விடுத்து, பல்வேறு வேலைகள் செய்ய வைக்கும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருவதாகவும், இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் சமூக ஆர்வலர்களும், பெற்றோரும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement
Tags :
MAINStudents washing dishes while wearing school uniform!
Advertisement