பள்ளி மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்ற புகார் - மதுரை மத்திய சிறை உதவி ஜெயிலர் மீது வழக்குப்பதிவு!
10:10 AM Dec 22, 2024 IST
|
Murugesan M
பள்ளி மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்ற புகாரில் மதுரை மத்திய சிறை உதவி ஜெயிலர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Advertisement
மதுரை மத்திய சிறையில் விசாரணை கைதியாக இருக்கும் தனது தந்தையை சந்திக்க பள்ளி மாணவி ஒருவர் உறவினருடன் சென்றுள்ளார். அப்போது பணியிலிருந்த உதவி ஜெயிலர் பாலகுருசாமி, மாணவியிடம் தகாத முறையில் பேசியதாக கூறப்படுகிறது.
இது குறித்து மாணவி தனது உறவினர்களிடம் தெரிவித்த நிலையில், சாலையில் சென்று கொண்டிருந்த உதவி ஜெயிலரை தடுத்து நிறுத்திய அவர்கள் சரமாரியாக தாக்கினர். மேலும், உதவி ஜெயிலரை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது. 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Advertisement
Advertisement