செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

பழங்குடியின இளைஞர் புலி தாக்கி உயிரிழந்த சம்பவம் - உறவினர்கள் போராட்டம்!

07:15 PM Mar 27, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

உதகை அருகே தோடர் பழங்குடியின இளைஞர் புலி தாக்கி உயிரிழந்த நிலையில், உரியப் பாதுகாப்பு வழங்கக்கோரி பழங்குடியின மக்கள் மருத்துவமனை உடற்கூறாய்வு கூடத்தை முற்றுகையிட்டனர்.

Advertisement

நீலகிரி மாவட்டம், உதகை அருகேயுள்ள கொள்ளிக்கோடு வந்து வனப்பகுதியில் தோடர் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அண்மையில் இந்த பழங்குடியினத்தைச் சேர்ந்த கேந்திர குற்றம் என்பவர் புலி தாக்கி உயிரிழந்தார்.

சம்பவ இடம் சென்ற வனத்துறையினர் அவரது உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக உதகை அரசு மருத்துவமனையில் வைத்தனர்.

Advertisement

இந்நிலையில், தங்கள் உயிருக்கு உரியப் பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட தோடர் பழங்குடியின மக்கள் உடற்கூறாய்வு கூடத்தை முற்றுகையிட்டதால் அங்குப் பதற்றமான சூழல் நிலவியது.

வனத்துறையினர் வனப்பரப்பை அதிகரித்துள்ளதால், தாங்கள் வாழ்ந்து வரும் பகுதிகளுக்குள் வன விலங்குகள் நுழையும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Advertisement
Tags :
Incident where a tribal youth was killed by a tiger!MAINபுலி
Advertisement