For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

பழங்குடி சமூகங்கள் குறித்து முந்தைய அரசுகள் அக்கறை காட்டவில்லை - பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

04:20 PM Nov 15, 2024 IST | Murugesan M
பழங்குடி சமூகங்கள் குறித்து முந்தைய அரசுகள் அக்கறை காட்டவில்லை   பிரதமர் மோடி குற்றச்சாட்டு

மிகவும் பின்தங்கிய பழங்குடி சமூகங்கள் குறித்து முந்தைய அரசுகள் அக்கறை காட்டவில்லை என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

பீகார் மாநிலம் ஜமுய் நகருக்கு பிர்சா முண்டாவின் 150-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கொண்டாடப்பட்ட பழங்குடியினரின் பெருமித தின நிகழ்வில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அவரை பழங்குடியின மக்கள் மேள தாளங்கள் முழங்க உற்சாகத்துடன் வரவேற்றனர். அப்போது பழங்குடியினரின் இசை வாத்தியத்தை வாங்கிய பிரதமர் மோடி தானும் இசைத்து மகிழ்ந்தார்.

Advertisement

இதனைத் தொடர்ந்து பிர்சா முண்டாவின் மார்பளவு திருவுருவச் சிலைக்கு, பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் பிர்சா முண்டாவுக்கான சிறப்பு தபால் தலையையும், அவரது உருவப்படம் பொறித்த 150 ரூபாய் நாணயத்தையும் பிரதமர் மோடி வெளியிட்டார். பின்னர் பீகார் மாநிலத்திற்காக சுமார் 6 ஆயிரத்து 640 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

இதனையடுத்து பேசிய பிரதமர் மோடி, சகோதர, சகோதரிகளுக்கு பழங்குடியினர் பெருமை தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக கூறினார். கலாசாரமாக இருந்தாலும், சமூக நீதியாக இருந்தாலும் இன்றைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் தரம் வேறு எனவும் அவர் கூறினார்.

Advertisement

திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவராக்கும் வாய்ப்பு கிடைத்ததை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைத்த அதிர்ஷ்டமாக கருதுவதாகவும், அவரே நாட்டின் முதல் பழங்குடியின குடியரசுத் தலைவர் எனவும் பிரதமர் மோடி கூறினார். பிரதமரின் ஜன்மன் யோஜனா திட்டத்தின் கீழ் இன்று பல பணிகள் தொடங்கப்பட்டதன் பெருமையும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவையே சாரும் எனவும் அவர் தெரிவித்தார்.

மிகவும் பின்தங்கிய பழங்குடி சமூகங்கள் பற்றி முந்தைய அரசுகள் அக்கறை காட்டவில்லை எனவும் பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். மேலும், அவர்கள் வாழ்வில் ஏற்படும் சிரமங்களைக் குறைக்கவே 24 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பிரதம மந்திரி ஜன்மன் யோஜனா திட்டம் தொடங்கப்பட்டதாகவும் பெருமை தெரிவித்தார்.

Advertisement
Tags :
Advertisement