செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

பழனி கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய காத்திருந்த பாஜக நிர்வாகி மரணம் - அண்ணாமலை இரங்கல்!

07:10 AM Mar 20, 2025 IST | Ramamoorthy S
featuredImage featuredImage

பழனி கோவிலில் தரிசனத்திற்கு காத்திருந்து போது உயிரிழந்த பாஜக நிர்வாகியின் மரணத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.

Advertisement

அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், பழனி கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வரிசையில் காத்திருந்தபோது, நாமக்கல் மாவட்டம் மோகனூர் கிழக்கு ஒன்றிய பாஜக  தலைவர் செல்வமணி  மூச்சுத் திணறல் ஏற்பட்டு, மருத்துவமனையில் உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தமளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்

அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை என்றும், இந்தத் துயரமான நேரத்தில், அவரது குடும்பத்தினருக்கு, தமிழக உறுதுணையாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Advertisement

நாமக்கல் மாவட்ட பாஜக நிர்வாகி செல்வமணி குடும்பத்தினருக்குத் தேவையான உதவிகளைச செய்திடுமாறு கட்சியினரை அண்ணாமலை கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement
Tags :
annamalai condolenceBJP leader SelvamaniFEATUREDMAINNamakkal district Mohanur EastPalani Murugan temple
Advertisement