செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

பழனி மலை அடிவார வியாபாரிகளுக்கு தனி சந்தை அமைத்து கொடுக்க வேண்டும் - இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தல்!

07:15 PM Nov 13, 2024 IST | Murugesan M
featuredImage featuredImage

பழனி மலை அடிவாரப் பகுதியில் கடை அமைத்திருந்த வியாபாரிகளுக்கு தனி சந்தை அமைத்து தர வேண்டுமென இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

இந்து முன்னணி சார்பில் சென்னிமலை முருகன் கோயிலில் இருந்து பழனிக்கு கொண்டு வரப்பட்ட வேல், போகர் சன்னதியில் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. இதில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காடேஸ்வரா சுப்பிரமணியம், பழனி அடிவாரப் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள வியாபாரிகளுக்கு மக்கள் சந்தை என்ற ஒன்றை ஏற்படுத்தி தர வேண்டுமென வலியுறுத்தினார்.

Advertisement

மேலும் வியாபாரிகள் வாழ்வாதாரம் காக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனில் இந்து முன்னணி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என காடேஸ்வரா சுப்பிரமணியம் எச்சரிக்கை விடுத்தார்.

 

Advertisement
Tags :
MAINPalanihindu munanistate presidentKateswara Subramaniampalani adivaaaram shops issue
Advertisement