பழனி முருகன் கோயிலில் அலைமோதிய பக்தர் கூட்டம் - 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் மழையில் நனைந்தபடியே சுவாமி தரிசனம் செய்தனர்.
Advertisement
வார விடுமுறையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பழனியில் குவிந்தனர். காவடி எடுத்தும், பாத யாத்திரை மேற்கொண்டும் பலர் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இதனால், கோயில் அடிவாரம், கிரிவல பாதை என திரும்பிய திசை எங்கும் பக்தர்கள் கூட்டம் அலை மாேதியது. சுமார் 3 மணி நேரம் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூலவர் பிரதிஷ்டை செய்யப்பட்ட தினத்தையொட்டி வருடாபிஷேகம் நடைபெற்றது. இதனால் அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து பூஜிக்கப்பட்ட புனித நீரால் கோபுரத்தில் உள்ள விமான கலசங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.