பழுது நீக்க ரூ. 90,000 பில் - விரக்தியில் மின்சார ஸ்கூட்டரை உடைத்த வாடிக்கையாளர்!
04:41 PM Nov 24, 2024 IST
|
Murugesan M
பழுதை நீக்க 90 ஆயிரம் ரூபாய் பில் வழங்கியாதல், தனது ஓலா மின்சார ஸ்கூட்டரை சுத்தியலால் அடித்து உடைக்கும் நபரின் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Advertisement
வாடிக்கையாளர் ஒருவர் தனது ஓலா மின்சார இருசக்கர வாகனத்தில் பழுது ஏற்பட்டதால், சரி செய்வதற்காக விற்பனையகத்தில் விட்டுள்ளார். பின்னர் விற்பனையக ஊழியர்கள் பழுதை நீக்க 90 ஆயிரம் ரூபாய் பில் வழங்கியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த இருசக்கர வாகனத்தின் உரிமையாளர் விற்பனையக வாசலிலே, தனது இருசக்கர வாகனத்தை சுத்தியலால் அடித்து நொறுக்கியுள்ளார். இதுகுறித்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Advertisement
Advertisement
Next Article