செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

பாகிஸ்தான் கப்பலில் இருந்து 7 இந்திய மீனவர்களை மீட்ட இந்திய கடற்படை!

11:25 AM Nov 19, 2024 IST | Murugesan M

நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் ஏழு பேரை பாகிஸ்தான் கடற்படை கைது செய்து அழைத்துச் சென்ற நிலையில், இந்திய கடற்படை வீரர்கள் 2 மணிநேரம் போராடி அவர்களை பத்திரமாக மீட்டனர்.

Advertisement

இந்தியா, பாகிஸ்தான் இடையே சர்வதேச கடற்பகுதியில் இந்திய மீனவர்கள் ஏழு பேர் காலபைரவர் என்ற படகில் பிற்பகல் மூன்று மணியளவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ரோந்துவந்த பாகிஸ்தான் கடற்படையினர், தடை செய்யப்பட்ட பகுதியில் மீன்பிடித்ததாக கூறி, இந்திய மீனவர்களை கைது செய்து கப்பலில் அழைத்துச் சென்றனர்.

இது தொடர்பாக மீனவர்கள் நடுக்கடலில் இருந்தவாறு குஜராத் கடற்படை கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் அளித்தனர். இதன்பேரில், இந்திய கடற்படைக்குச் சொந்தமான அக்ரிம் கப்பலில் பின்தொடர்ந்து சென்ற கடற்படை வீரர்கள், சுமார் 2 மணிநேரம் போராடி, மீனவர்களை மீட்டு ஓகா துறைமுகத்துக்கு அழைத்து வந்தனர்.

Advertisement

இருப்பினும், பாகிஸ்தான் கடற்படையினர் இந்திய மீனவர்களின் படகை சேதப்படுத்தியதில், அது கடலில் மூழ்கிவிட்டதாக கூறப்படுகிறது.

Advertisement
Tags :
FEATUREDIndian Navy rescued 7 Indian fishermen from Pakistani ship!MAIN
Advertisement
Next Article