பாஜக இளைஞர் அணி நிர்வாகிகள் கைது - அண்ணாமலை கண்டனம்!
அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் போராட்டத்தில் ஈடுப்பட்ட தமிழக பாஜக இளைஞர் அணியினர் கைது செய்யப்பட்டுள்ளதற்கு மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
Advertisement
இதுதொட்ரபாக அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது : "அண்ணா பல்கலைக்கழக மாணவி, திமுக நிர்வாகியால் பாலியல் தாக்குதலுக்கு உள்ளான வழக்கில், திமுக அரசின் மந்தமான போக்கைக் கண்டித்தும், வழக்கு விசாரணையை நேர்மையான முறையில் நடத்தக் கோரியும், குற்றவாளி குறிப்பிட்ட இன்னொரு நபர் குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தியும், தமிழக பாஜக இளைஞர் அணி சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் இன்று போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் அணி தலைவர் ரமேஷ் சிவா உள்ளிட்ட நிர்வாகிகளைக் காவல்துறை கைது செய்துள்ளது.
வழக்கைத் திசைதிருப்பும் முயற்சியில் ஆரம்பக் கட்டத்திலிருந்தே ஈடுபட்டு வரும் திமுக அரசு, நேர்மையான விசாரணை கோரும் குரல்களை ஒடுக்குவது, அப்பட்டமான ஜனநாயக மீறல் ஆகும். குற்றவாளிகளைக் காப்பாற்றும் முயற்சியில், மேலும் மேலும் தவறுகளை இழைத்துக் கொண்டிருக்கிறது திமுக அரசு.