பாஜக எம்பிக்களை தள்ளிவிட்ட விவகாரம் - ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு!
09:30 AM Dec 20, 2024 IST
|
Murugesan M
பாஜக எம்பிக்களை தள்ளிவிட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Advertisement
நாடாளுமன்ற வளாகத்தில் அம்பேத்கர் பிரச்னையை எழுப்பி எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது, பாஜக எம்பி பிரதாப் சாரங்கியை
ராகுல் காந்தி தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. மேலும், ஒரு எம்பியும் தள்ளுமுள்ளில் காயமடைந்தார்.
இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக பாஜக எம்.பி. அனுராக் தாக்கூர் உள்ளிட்டோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில், கடுமையான காயத்தை ஏற்படுத்துதல், உயிர் அல்லது பிறரின் தனிப்பட்ட பாதுகாப்புக்கு ஆபத்து விளைவித்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின்கீழ் ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement