பாஜக சிறுபான்மை நல பிரிவை சேர்ந்த வேலூர் இப்ராஹிம் கைது!
03:20 PM Jan 25, 2025 IST | Murugesan M
ராமாநாதபுரம் எம்பி நவாஸ்கனியின் புகைப்படத்தை காலணியால் தாக்கிய பாஜக சிறுபான்மை பிரிவை சேர்ந்த வேலூர் இப்ராஹீமை போலீசார் கைது செய்தனர்.
அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் மலை மீது இஸ்லாமிய அமைப்பினர் ஆடு, கோழிகளை பலியிட முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Advertisement
இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி மலை மீது அசைவ உணவு சாப்பிட்டதால் சர்ச்சை எழுந்தது.
இந்த விவகாரத்தில் நவாஸ்கனிக்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் பாஜக சிறுபான்மை நல பிரிவை சேர்ந்த வேலூர் இப்ராஹிம் நவாஸ் கனியின் புகைப்படத்தை காலணியால் அடித்து தனது எதிர்ப்பை தெரிவித்தார்.
Advertisement
அதைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் மலைக்கு செல்வதாக அறிவித்த அவரை, மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல்துறையினர் கைது செய்தனர்.
Advertisement