பாஜக தமிழக இளைஞரணி தலைவர் வினோஜ் பி.செல்வத்திற்கு எதிரான அவதூறு வழக்கு தள்ளுபடி!
10:17 AM Nov 15, 2024 IST | Murugesan M
தமிழக பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் பி.செல்வத்திற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கை தள்ளுபடி செய்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் பி செல்வத்தின் மீது, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.
Advertisement
இது குறித்து முறையான ஆதாரங்களை தாக்கல் செய்ய, எழும்பூர் நீதிமன்றம் தயாநிதிமாறனுக்கு போதிய அவகாசமும் வழங்கியிருந்தது.
ஆனால், தயாநிதி மாறன் வழக்கு விசாரணைக்கு முறையாக ஆஜராகாததாலும், போதிய ஆதாரங்களை தாக்கல் செய்யாததாலும், வழக்கை தள்ளுபடி செய்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
Advertisement
Advertisement