பாஜக புதிய மாவட்ட தலைவர்களுக்கு அண்ணாமலை வாழ்த்து!
பாஜக புதிய மாவட்ட தலைவர்களுக்கு அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Advertisement
நாமக்கல்லில் நடைபெற்ற பாஜக மாவட்ட தலைவர் பதவியேற்பு விழாவில் அண்ணாமலை உரையாற்றினார். அப்போது தமிழகத்தில் பாஜக அசுர வளர்ச்சி கண்டுள்ளது எனவும், 2026ல் தமிழகத்தில் பாஜக ஆட்சியமைப்பது உறுதி எனவும் கூறினார். பாஜக ஜனநாயகம் மிகுந்த கட்சி என பெருமிதம் தெரிவித்த அண்ணாமலை, மாவட்ட தலைவர்களுக்கு தோள் கொடுத்து பணியாற்ற வேண்டும் எனவும் நிர்வாகிகளை அறிவுறுத்தினார்.
மேலும் இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், பாரதப் பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, தமிழக பாஜக புதிய மாவட்டத் தலைவர்களாகப் பொறுப்பேற்றிருக்கும் அனைவருக்கும், மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
‘தேசப் பணிகளிலும், மக்கள் பணிகளிலும் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, தமிழகத்தில், பாரதப் பிரதமர் மோடி அவர்கள் வழிகாட்டுதலின்படி நல்லாட்சியைக் கொண்டு வரவும், வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி, நமது தமிழகத்தைக் கொண்டு செல்லவும், அயராது உழைக்க வேண்டும் என்று அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.