பாஜக மாநில தலைவர் தேர்தல் அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் : சுதாகர் ரெட்டி!
05:34 PM Feb 01, 2025 IST
|
Murugesan M
தமிழகத்தில் பாஜக மாநில தலைவருக்கான தேர்தல் குறித்து ஓரிரு தினங்களில் அறிவிப்பு வெளியாகும் என பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.
Advertisement
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சென்னை கமலாலயத்தில் அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
அப்போது பேட்டியளித்த சுதாகர் ரெட்டி, பாஜக மாநில தலைவர்களுக்கான தேர்தல் 7 மாநிலங்களில் முடிவடைந்துள்ளதாக தெரிவித்தார். தமிழகத்தில் பாஜக மாநில தலைவர் தேர்தல் முறைப்படி நடத்தப்படும் என தெரிவித்த அவர், ஓரிரு நாட்களில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறினார்.
Advertisement
Advertisement