பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மருத்துவமனையில் அனுமதி!
04:57 PM Dec 14, 2024 IST
|
Murugesan M
முன்னாள் துணை பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான லால் கிருஷ்ண அத்வானி உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Advertisement
மூத்த மருத்துவர்கள் குழுவின் கண்காணிப்பில் அத்வானி இருப்பதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
97 வயதாகும் அத்வானி, சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இதே மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement
Next Article