பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி பிறந்த நாள் - இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!
10:40 AM Nov 09, 2024 IST
|
Murugesan M
பாஜக மூத்த தலைவர் எல் கே அத்வானியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது இல்லத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.
Advertisement
பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானி தனது 97-வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார் . இதனையடுத்து அவர் இல்லத்திற்கு நேரில் சென்ற பிரதமர் மோடி அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அவருடன் மத்திய அமைச்சரும், பாஜக தேசிய தலைவருமான ஜெ.பி. நட்டாவும் அத்வானிக்கு வாழ்த்து தெரவித்தார்.
இதேபோல் முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி உள்ளிட்டோரும் அத்வானியின் இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.
Advertisement
Advertisement
Next Article