தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கட்சிக்கும் சித்தாந்தம் வேறு. - லண்டனில் அண்ணாமலை பேச்சு!
10:08 AM Nov 16, 2024 IST
|
Murugesan M
பாஜக-விற்கு ஒரு எதிரி கிடையாது, காலையில் திமுகவுடனும், மதியம் அதிமுக-வுடனும், மாலை காங்கிரஸுடனும் சண்டை செய்யணும் என லண்டனில் மாணவர்கள் மத்தியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உரையாற்றியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
Advertisement
ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் சர்வதேச அரசியல் புத்தாய்வு படிப்பில் சேர்ந்து படிக்க, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கடந்த ஆகஸ்ட் மாதம் லண்டன் சென்றார். வரும் 28-ம் தேதி அவர் தமிழகம் திரும்பவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே லண்டனில் உள்ள பொருளாதாரம் மற்றும் அரசியல் அறிவியல் பள்ளியில் நடைபெற்ற கருத்தரங்கில், அண்ணாமலை சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
Advertisement
இதனைத்தொடர்நது அங்கு காத்திருந்த ஏராளமான மாணவர்கள் அண்ணாமலையிட்ம் ஆட்டோகிராப் வாங்கியும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.
Advertisement