பாஞ்சாலங்குறிச்சி போர்தான் முதல் இந்திய சுதந்திர போர் - ஆளுநர் ஆர்.என்.ரவி
09:59 AM Nov 13, 2024 IST
|
Murugesan M
கடந்த ஆயிரத்து 801-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாஞ்சாலங்குறிச்சி போர்தான் முதல் இந்திய சுதந்திர போர் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
Advertisement
எழுத்தாளர் செந்தில்குமார் எழுதிய பாஞ்சாலங்குறிச்சி போர்கள் என்ற புத்தக வெளியீட்டு விழா சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் புத்தகத்தை வெளியிட்டு பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல் இந்திய சுதந்திர போர் என்று வர்ணிக்கப்படும் 1857 போரை காட்டிலும், பாஞ்சாலங்குறிச்சி போர் 1801-ஆம் ஆண்டிலேயே நடைபெற்றதாகவும், அந்தப் போர் 9 ஆண்டுகள் வரை நீடித்ததாகவும் குறிப்பிட்டார்.
Advertisement
தொடர்ந்து, ஆங்கிலேயர்களுக்கு எதிராக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்திய தேசிய ராணுவத்தைக் கட்டமைத்த போது தமிழகத்திலிருந்து 4 ஆயிரத்து 700-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அதில் இணைந்தது பெருமிதம் அளிப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.
Advertisement
Next Article