For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

பாடகர் ஜெயச்சந்திரன் மறைவு - பிரதமர் மோடி இரங்கல்!

12:20 PM Jan 10, 2025 IST | Murugesan M
பாடகர் ஜெயச்சந்திரன் மறைவு   பிரதமர் மோடி இரங்கல்

பாடகர் ஜெச்சந்திரன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு வருடமாக பாடகர் பி. ஜெயச்சந்திரன் கடந்த ஒரு வருடமாக கல்லீரல் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 80.

Advertisement

திருச்சூர் மாவட்டம் பூக்குன்னம்  வீட்டில் நேற்று (ஜனவரி 9) மாலை 7 மணியளவில் ஜெயச்சந்திரன் திடீரென மயக்கமடைந்தார். இதனையடுத்து அவர் உடனடியாக திரிச்சூரில் உள்ள அமலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

அவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

பிரதமர் மோடி விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது : பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் புகழ்பெற்ற குரலால் ஸ்ரீ பி. ஜெயச்சந்திரன் அனைவர் மனங்களை வசீகரித்தவர்.

பல்வேறு மொழிகளில் அவரது ஆத்மார்த்தமான பாடல்கள் வரும் தலைமுறையினரின் இதயங்களைத் தொடும். அவரது மறைவால்  வேதனையடைந்தேன். இந்த துயர நேரத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுடன் உடன் உள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Advertisement
Tags :
Advertisement