பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலை மாணவிக்கு ரூ. 25 லட்சம் நிவாரணம் - தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Advertisement
இந்த விவகாரம் தொடர்பாக பாஜக, அதிமுக தாக்கல் செய்த வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.
அப்போது பாதிக்கப்பட்ட மாணவிக்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மாணவிக்கு உரிய மனநல ஆலோசனைகளை வழங்க வேண்டும் எனவும் மாணவி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் ஆணை பிறப்பித்தனர்.
மேலும், பாதிக்கப்பட்ட மாணவி படிப்பை தொடர்வதில் எந்த பாதிப்பும் ஏற்படக் கூடாது எனவும், கல்வியை முடிக்கும் வரை அவரிடம் இருந்து எந்த கட்டணமும் வசூலிக்க கூடாது என்றும் அண்ணா பல்கலைக் கழகத்திற்கு உத்தரவிட்டனர்.
அத்துடன் யுஜிசி நெறிமுறைகள்படி மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.