For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலை மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம் - மத்திய அமைச்சர் எல்.முருகன் உறுதி!

12:55 PM Dec 29, 2024 IST | Murugesan M
பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலை மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம்   மத்திய அமைச்சர் எல் முருகன் உறுதி

பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமையில் பிரதமர் நரேந்திர மோடி வானொலி மூலமாக நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டின் இறுதி மன் கி பாத் நிகழ்ச்சி நடைபெற்றது.

Advertisement

இதனை மத்திய இணை அமைச்சர் எல் முருகன் சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது இல்லத்தில் பாஜக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களோடு இணைந்து கேட்டார்.

பின்னர்  செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது :

Advertisement

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவம்  வன்மையாக கண்டிக்கத்தக்கது.  . பாஜக சார்பில் போராட்டம் நடைபெற்று  வருகிறது..  திமுக அரசு குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சிக்கக் கூடாது. முறையான விசாரணை நடத்தி குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும்..

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இதற்காக பெரிய சபதத்தை எடுத்து அறுபடை வீடுகளுக்கு செல்வதாக அறிவித்திருக்கிறார்..அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம்.

குற்றவாளி யாராக இருந்தாலும் அவர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். முறையான விசாரணை நடத்தி குற்றவாளியை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒரே நாள் விசாரணையில், ஒருவர் தான் குற்றவாளி என இல்லாமல் முழுமையாக நீதி விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட வேண்டும். சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்..

FIR வெளியானது அவமானப்படக் கூடிய விஷயம்.. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு என்கிற பேச்சே இல்லை. எங்கு சென்றாலும் கஞ்சா புழக்கம் உள்ளது.  நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் அம்பேத்கர் விவகாரம் தொடர்பாக ஆர்ப்பாட்டம் செய்துள்ளார். அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது கொடுத்ததே  பிரதமர் மோடி தான்.அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் தொடர்பாக நியாயம் கேட்டு திருமாவளவன் போராட்டம் நடத்தினால் நன்றாக இருக்கும்.

அந்த குற்றவாளி  பல குற்றங்கள் செய்து இருக்கிறார். அவர் திமுக நிர்வாகி என்று சொல்கிறார்கள் அது பற்றி விசாரிக்க வேண்டும். அந்த குற்றவாளி என்னென்ன பதவிகளில் இருந்துள்ளார் யாருடன் எல்லாம் புகைப்படம் எடுத்துள்ளார் என்று பாஜக மாநில தலைவர் ஆதாரங்களை வெளியிட்டுள்ளார். அதனை திமுகவினர் ஒப்புக்கொள்ள வேண்டும்.

மற்ற வழக்குகள் போல இல்லாமல் சிறப்பு வழக்காக விசாரிக்க வேண்டும்.  இல்லையென்றால் வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

மேலும் இன்றைய மனதில் குரல் நிகழ்ச்சியில் Creative economy பற்றி பிரதமர் மிக விளக்கமாக பேசினார். சினிமா, gaming, மீடியா துறைகள் எந்த அளவுக்கு இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு, வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் துறையாக உள்ளது என பிரதமர் கூறியுள்ளார்.

மக்கள் பங்களிப்புடன் மிகப்பெரிய மாற்றத்தை சுற்றுச்சூழல் மூலமாக உருவாக்க வேண்டும் என்றும்,   மலேரியா ஒழிப்பு முன்னேற்பாடு, பொதுமக்கள் செய்யும் தலை சிறந்த பணி போன்ற பல விஷயங்களை மனதின் குரல் மூலம் பிரதமர் எடுத்துக் சொல்லியுள்ளதாகவும் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

Advertisement
Tags :
Advertisement