பாமக முக்கிய நிர்வாகிகளுடன் டாக்டர் ராமதாஸ் ஆலோசனை!
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் யார் என்பது குறித்து அக்கட்சியில் குழப்பம் நிலவி வரும் சூழலில், ராமதாஸ் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
Advertisement
பாமகவின் தலைவராக இனி தாமே செயல்படப்போவதாக மருத்துவர் ராமதாஸ் அண்மையில் அறிவித்தார். அதனை தொடர்ந்து அறிக்கையை ஒன்றை வெளியிட்ட அன்புமணி, பொதுக்குழு உறுப்பினா்களால் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டு, தோ்தல் ஆணைய அங்கீகாரத்தையும் தாம் பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
இந்நிலையில், தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் முக்கிய நிர்வாகிகளான ஜி.கே.மணி உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொண்டார்.
மறுபுறம், அன்புமணி ராமதாஸை அவரது சகோதரி மகன் முகுந்தன் நேரில் சந்தித்து பேசினார். சென்னை அடுத்த அக்கரையில் உள்ள அன்புமணியின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. 4 மாதங்களுக்கு முன்பு முகுந்தன் பரசுராமனை இளைஞரணி தலைவராக நியமனம் செய்வதாக அறிவித்ததில் இருந்துதான், ராமதாஸ்-அன்புமணி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.