பாம்பன் கலங்கரை விளக்கம் - சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதி!
02:15 PM Dec 10, 2024 IST
|
Murugesan M
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் உள்ள கலங்கரை விளக்கத்தை சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Advertisement
பாம்பனில் கடந்த 122 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்களால் கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டது. சுதந்திரத்திற்கு பிறகு மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த கலங்கரை விளக்கம் கடந்த 2003ம் ஆண்டு மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கலங்கரை விளக்கத்தை சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் கலங்கரை விளக்கத்திற்கு ஆர்வமுடன் வருகை தரும் சுற்றுலா பயணிகள், ராமேஸ்வரம் தீவின் மொத்த அழகையும் கண்டு ரசித்து வருகின்றனர்.
Advertisement
Advertisement
Next Article