பாம்பன் புதிய ரயில் பாலத்தில் தெற்கு ரயில்வே மதுரை கோட்ட மேலாளர் ஆய்வு!
பாம்பன் புதிய ரயில் பாலத்தில் தெற்கு ரயில்வே மதுரை கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீவஸ்தவா ஆய்வு மேற்கொண்டார்.
ராமேஸ்வரம் பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ரயில்களை இயக்கியும், தூக்குப் பாலத்தை ஏற்றி-இறக்கியும் சோதனை நடத்தப்பட்ட நிலையில், கடந்த நவம்பர் 13, 14 ஆகிய தேதிகளில் ஆய்வு மேற்கொண்ட ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி, பாலத்தில் சில குறைகள் இருப்பதாகவும், அதனை சரிசெய்த பின்பே ரயிலை முறைப்படி இயக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து ரயில்வே அமைச்சரின் உத்தரவின்பேரில் 5 பேர் கொண்ட குழுவினர் குறைபாடுகளை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இதன் தொடர்ச்சியாக பாம்பன் புதிய ரயில் பாலத்தில் தெற்கு ரயில்வே மதுரை கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீவஸ்தவா ஆய்வு மேற்கொண்டார். குறைபாடுகள் சரிசெய்யப்பட்ட பின்பு பாலம் பாதுகாப்பாக உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.