பாம்பன் ரயில் பாலத்தில், ரயில்வே முதன்மை பாதுகாப்பு ஆணையர் ஆய்வு!
பாம்பன் ரயில் பாலத்தில், ரயில்வே முதன்மை பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி தலைமையிலான குழுவினா் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
Advertisement
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் - ராமேசுவரம் தீவுப் பகுதியை இணைக்கும் வகையில் 550 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய ரயில் பாலம் கட்டுமானப் பணி அண்மையில் நிறைவடைந்தது. போக்குவரத்து தொடங்குவதற்காக ஆய்வுப் பணிக்காக ரயில்வே பாதுகாப்பு ஆணையா் ஏ.எம்.சௌத்ரி தலைமையிலான குழுவினா் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து பாம்பன் ரயில் நிலையம் வரை இன்றும் நாளையும், அதிவேக ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. இதன் காரணமாக இந்தப் பகுதியில் உள்ள ரயில் தண்டவாளம் அருகே பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் புதிய பாம்பன் பாலம் திறக்கும் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.