செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

பாம்பு கடித்து மூதாட்டி உயிரிழப்பு!

04:52 PM Mar 26, 2025 IST | Murugesan M

கன்னியாகுமரி அருகே எலி கடித்ததா? பாம்பு கடித்ததா? என்ற குழப்பத்திலிருந்த மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி அருகே உள்ள ரெத்தினபுரம் பகுதியில்  மணி என்ற மூதாட்டி வசித்து வந்தார். இவர் வீட்டில் உள்ள அறை ஒன்றில் தேங்காய் எடுக்கச் சென்றுள்ளார்.

அப்போது அவரை ஏதோ ஒன்று கடித்துள்ளது. அப்போது, அந்த பக்கமாக எலி ஒன்று ஓடியதைக் கண்ட மூதாட்டி , தன்னை எலிதான் கடித்தது என நினைத்துள்ளார்.

Advertisement

சிறிது நேரத்தில் மூதாட்டிக்கு மயக்கம் ஏற்பட்டதால், அக்கம் பக்கத்தினர் குவியலைக் கிளறியபோது நல்ல பாம்பு கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக மணியை ஆசாரி பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மூதாட்டி மணி வரும் வழியிலேயே உயிரிழந்ததாகத் தெரிவித்தனர்.

Advertisement
Tags :
Elderly woman dies after being bitten by a snake!MAINமூதாட்டி உயிரிழப்பு!
Advertisement
Next Article