பாம்பு கடித்து பாம்பு பிடி வீரர் உயிரிழப்பு!
02:43 PM Mar 20, 2025 IST
|
Murugesan M
கோவையில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பாம்பு பிடி வீரர் சந்தோஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Advertisement
கோவையைச் சேர்ந்த சந்தோஷ், கடந்த 20 வருடங்களாக பாம்பு பிடி தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். தொண்டாமுத்தூர் குடியிருப்புப் பகுதியில் பாம்பு புகுந்ததாக சந்தோஷிக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதன்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற அவர் பாம்பைப் பிடிக்க முயன்றபோது, அவரை நாகப்பாம்பு கடித்தது. ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது இறப்பிற்கு வன உயிரின ஆர்வலர்கள் இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
Advertisement
Advertisement