பாம் சரவணனுக்கு வரும் 30ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் - எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு!
02:15 PM Jan 17, 2025 IST | Sivasubramanian P
ரவுடி பாம் சரவணனை 30ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த ரவுடி பாம் சரவணன் மீது 26 வழக்குகள் உள்ளன. ஆந்திர மாநிலம் சித்தூரில் தலைமறைவாக இருந்த அவரை போலீசார்
சுட்டுப் பிடித்தனர்.
Advertisement
இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், வீடியோ கால் மூலமாக எழும்பூர் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, பாம் சரவணனை வரும் 30ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார்.
Advertisement
Advertisement