செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

பாரதத்தை வல்லரசுகளின் வரிசையில் இடம்பெறச் செய்தவர் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் - அண்ணாமலை புகழாரம்!

09:22 AM Dec 25, 2024 IST | Murugesan M

பாரதத்தை வல்லரசுகளின் வரிசையில் இடம்பெறச் செய்தவர் வாஜ்பாய்  என தமிழக பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை புகழாரம் சூட்டியுள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக அவர் பதிவில் தெரிவித்துள்ளதாவது : "பாரதத்தின் முன்னாள் பிரதமரும், பாஜக நிறுவனர்களில் ஒருவருமான பாரத ரத்னா, அமரர். அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களது பிறந்த நூற்றாண்டு தினம் இன்று. மிகச் சிறந்த பேச்சாளரும், கவிஞருமான வாஜ்பாய் அவர்கள், சுதந்திர இந்தியாவின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கொள்கைகளை வடிவமைத்ததில் முக்கியப் பங்கு வகித்தவர்.

பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர், நாடாளுமன்ற நிலைக் குழுக்களின் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் என பல பதவிகளிலும் திறம்படப் பணியாற்றியவர். நமது பாரதத்தை அணு ஆயுத நாடுகளில் ஒன்றாக உருவாக்கி, வல்லரசுகளின் வரிசையில் இடம்பெறச் செய்தவர்.

Advertisement

கார்கில் போரில் எதிரிகளைத் தோற்கடித்து, நம் நாட்டின் வலிமையை வெளிப்படுத்தியவர். சமத்துவம், சமூக நீதி, பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றிற்காக அயராது உழைத்தவர். அவரது தலைமையும், தொலைநோக்கு பார்வையும் கோடிக்கணக்கான நம் நாட்டு மக்களை இன்றும் வழி நடத்துகிறது.

தேசத்திற்கான அவரது பங்களிப்பு என்றும் மறக்க முடியாதது. தேசத்தின் மீது கொண்ட அன்பால், நாட்டிற்காக அவர் ஆற்றிய தன்னலமற்ற சேவைகளைக் கருத்தில் கொண்டு, அமரர் வாஜ்பாய் அவர்கள் பிறந்த தினம், கடந்த 2014 ஆம் ஆண்டு  பாரதப் பிரதமர் மோடி அவர்களால், தேசிய நல்லாட்சி தினமாக அறிவிக்கப்பட்டுக் கொண்டாடப்பட்டு வருகிறது. அமரர் வாஜ்பாய் அவர்களது புகழைப் போற்றி வணங்குகிறோம்" என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Advertisement
Tags :
annamalaiFEATUREDformer prime minister vajpayeeMAINtamilnadu bjp presidentvajpayee birthday
Advertisement
Next Article