பாரதியின் சிந்தனைகளும், ஆழ்ந்த ஞானமும் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் - பிரதமர் மோடி புகழாரம்!
மகாகவி சுப்ரமணிய பாரதியை போன்றவர்கள் நூற்றாண்டுக்கு ஒருமுறையே அவதரிப்பர் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.
Advertisement
பாரதியார் பிறந்த நாளையொட்டி அவரது நூல்களின் தொகுப்பை பிரதமர் மோடி டெல்லியில் வெளியிட்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், பாரதியின் சிந்தனைகளும், ஆழ்ந்த ஞானமும் இன்றைக்கும் நமக்கு உத்வேகம் அளிப்பதாக குறிப்பிட்டார்.
கடமையை நோக்கமாக கொண்ட தனது அரசு, பாரதியின் பங்களிப்பை பொதுமக்களிடம் தீரத்துடன் எடுத்துச் செல்வதாகவும், பாரதிக்கும் தனது தொகுதியான வாரணாசிக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் பிரதமர் மோடி அப்போது தெரிவித்தார்.
தாய்நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற சிந்தனையுடன் பாரதியை போன்ற உன்னத தலைவர்கள் நூற்றாண்டுக்கு ஒருமுறைதான் அவதரிப்பர் என்றும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
23 தொகுதிகள் கொண்ட பாரதி நூல் தொகுப்பை அலையன்ஸ் பதிப்பாளர் சீனி விஸ்வநாதன் தொகுத்துள்ளார். இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.