செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

"பாரத்  பருப்பு" கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை

11:31 AM Jul 18, 2023 IST | Murugesan M

மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம், ஜவுளி, வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மானியத்துடன் கூடிய  கடலைப் பருப்பு விற்பனையை 'பாரத்  பருப்பு' என்ற பெயரில் தொடங்கி வைத்தார்.
இந்தப் பருப்பு ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், 30 கிலோவாக வாங்கும்போது ஒரு கிலோ 55 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

Advertisement

தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு மூலம் இந்தப் பருப்பு பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு, மாநில அரசுகளுக்கு வழங்படவுள்ளதோடு, நுகர்வோர் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலமாகவும் விநியோகிக்கப்படவுள்ளது.

கடலைப்பருப்பு இந்தியாவில் மிக அதிகமாக உற்பத்தி செய்யப்படும் பருப்புகளில் ஒன்றாகும்.
துவரம்பருப்புக்கு மாற்றாக வறுத்த கடலைப் பருப்பு பயன்படுத்தப்படுகிறது. இரத்த சோகை,  சர்க்கரை போன்றவற்றை கட்டுப்படுத்தவும் கடலைப்பருப்பு பயன்படுத்தப்படுகிறது. உடலுக்குத் தேவையான நார்ச்சத்து, இரும்பு, பொட்டாசியம், வைட்டமின் பி போன்ற பல ஊட்டச்சத்துகள் இதில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement
Tags :
FEATUREDMAIN
Advertisement
Next Article