பாரம்பரிய உடையணிந்து பொங்கல் பண்டிகை கொண்டாடிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி!
05:58 PM Jan 09, 2025 IST
|
Murugesan M
சென்னை ஆளுநர் மாளிகையில் பொங்கல் பண்டிகை வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
Advertisement
தை முதல் நாளில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மக்கள் அறுவடை செய்த அரிசியை கொண்டு பொங்கல் செய்து, விவசாயத்திற்கு உதவிய சூரிய பகவானுக்கு முதலில் பொங்கல் படைத்து நன்றி செலுத்தி வழிபாடு செய்வார்கள்.
நடப்பு ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 14 ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கொண்டாட்டங்கள் களை கட்ட தொடங்கியுள்ளன.
Advertisement
இந்நிலையில், சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில், தை பொங்கலை முன்னிட்டு, "பொங்கல் பெருவிழா" நிகழ்ச்சி நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என்.ரவி பாரம்பரிய உடையணிந்து பங்கேற்றார். இந்த விழாவில், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மேற்குவங்க முன்னாள் ஆளுநர் MK நாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Advertisement
Next Article