பாரம்பரிய முறைப்படி மூடப்பட்ட சென்னை உயர் நீதிமன்ற வாயில்கள்!
11:01 AM Nov 24, 2024 IST
|
Murugesan M
சென்னை உயர் நீதிமன்றத்தில் பாரம்பரிய முறைப்படி அனைத்து வாயில்களும் 24 மணி நேரம் மூடப்பட்டன.
Advertisement
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஜார்ஜ் டவுன், பாரிமுனை, பூக்கடை பகுதிகளுக்கு நடுவில் உயர் நீதிமன்றம் கட்டப்பட்டதால், இப்பகுதிகளில் வசித்த மக்கள் நீதிமன்ற வளாகத்தை, தினசரி வழிப்பாதையாக பயன்படுத்த தொடங்கினர்.
வருங்காலங்களில் நீதிமன்ற வளாக வழிப்பாதைகளை பொதுமக்கள் உரிமை கோரி விடக்கூடாது என்பதற்காக நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் வருடத்தில் ஒரு நாள் மூடப்படும் என்று நீதிமன்ற நிர்வாகம் அறிவித்தது.
Advertisement
இந்த நடைமுறை ஒவ்வொரு வருடத்தின் நவம்பர் இறுதி வாரத்தின் சனிக்கிழமையில் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி நேற்றிரவு 8 மணி முதல் இன்று இரவு 8 மணி வரை, 24 மணி நேரத்திற்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் அனைத்து நுழைவு வாயில்களும் மூடப்பட்டன.
Advertisement
Next Article