பாலமேடு ஜல்லிக்கட்டு - 14 காளைகளை அடக்கிய பார்த்திபனுக்கு கார் பரிசு!
மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 14 காளைகளை அடக்கிய நத்தத்தை சேர்ந்த பார்த்திபனுக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.
மாட்டுப் பொங்கலை ஒட்டி மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமர்சையாக நடைபெற்றது. விறு விறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் சீறிப்பாய்ந்த 14 காளைகளை அடக்கி பார்த்திபன் முதலிடம் பிடித்தார். அவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.
12 காளைகளை பிடித்து இரண்டாம் இடம் பெற்ற மஞ்சம்பட்டியைச் சேர்ந்த மாடுபிடி வீரர் துளசிராமுக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது. அதேபோல் 11 காளைகளை அடக்கி மூன்றாம் இடம் பிடித்த பொதும்பு பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்பவருக்கு எலக்ட்ரிக் பைக் பரிசாக வழங்கப்பட்டது.
அதேபோல் களத்தில் சீறிப்பாய்ந்த சத்திரப்பட்டியை சேர்ந்த விஜய தங்கப்பாண்டி என்பவரின் காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டு டிராக்டர் வழங்கப்பட்டது.
இரண்டாம் பரிசை சின்னப்பட்டியை சேர்ந்த காளை தட்டி சென்றது. அதன் உரிமையாளரான கார்த்திக் என்பவருக்கு கன்றுடன் கறவை மாடு பரிசாக வழங்கப்பட்டது.