பாலியல் குற்றங்களை தடுக்க குற்ற நியாய அமைப்பை உருவாக்கவேண்டும்! : முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு
02:29 PM Jan 12, 2025 IST | Murugesan M
பாலியல் குற்றங்களை தடுக்க வெளிநாடுகளில் இருப்பதைபோல், குற்ற நியாய அமைப்பை உருவாக்க வேண்டும் என்று முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக தன்னம்பிக்கை விழா நடைபெற்றது.
Advertisement
இதில், சிறப்பு விருந்தினராக முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு பங்கேற்று, விழாவை தொடங்கி வைத்தார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்கில் போடும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட சட்ட மசோதாவுக்கு வரவேற்பு தெரிவித்தார்.
மேலும், இந்த புதிய சட்டம் மூலம் பாலியல் குற்றங்கள் பெருமளவு குறையும் என நம்பிக்கை தெரிவித்தார்.
Advertisement
Advertisement