பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட அண்ணாநகர் சிறுமிக்கு இடைக்கால இழப்பீட்டை 4 வாரங்களில் வழங்க நீதிமன்றம் உத்தரவு!
சென்னை அண்ணாநகரில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 3 லட்ச ரூபாய் இடைக்கால இழப்பீட்டை 4 வாரங்களில் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Advertisement
சென்னை அண்ணாநகரில் பாலியல் வன்கொடுமைக்குள்ளான சிறுமியின் தாய் தரப்பில் இழப்பீடு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது ஆஜரான அரசு தரப்பு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஏற்கனவே ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 3 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க இருப்பதாக கூறி, அதற்கான அரசாணையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
அப்போது நீதிபதிகள், வழக்கு விவரம், வாக்குமூலம் அளித்த வீடியோ, ஆடியோ அனைத்தையும் காவல்துறை பொது வெளியில் வெளியிட்டதால், முழு இழப்பீட்டை ஏன் வழங்க கூடாது என அரசுக்கு கேள்வி எழுப்பினர்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இடைக்கால இழப்பீடாக 3 லட்ச ரூபாயை 4 வாரங்களில் வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.