பாலியல் வன்கொடுமை வழக்குகளில் தண்டனையை கடுமையாக்கும் சட்ட மசோதா - குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பு?
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளில் தண்டனையை கடுமையாக்கும் சட்ட மசோதாவை குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய அரசின் பாரதீய நியாய சன்ஹிதா மற்றும் பாரதீய நகரிக் சுரக்ஷா ஆகிய சட்டங்களில் உள்ள 17 பிரிவுகளில் திருத்தம் செய்யும் வகையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு வழங்கப்படும் தண்டனையை கடுமையாக்கும் வகையில் தமிழக சட்டப்பேரவையில் அண்மையில் சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கும் நபர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட சட்டத்திருத்த மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது ஆளுநர் மூலமாக குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அரசின் சட்டங்கள் என்பதால் குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு பிறகு தமிழகத்தில் அமலுக்கு வரும் என்று, அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.