பாலியல் வன்கொடுமை வழக்கில் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா கைது!
07:22 PM Mar 31, 2025 IST
|
Murugesan M
மகா கும்பமேளா புகழ் மோனலிசா போல்லேவுக்கு நடிக்க வாய்ப்பு வழங்கிய இயக்குநர் சனோஜ் மிஸ்ரா பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
Advertisement
சமீபத்தில் நடந்து முடிந்த மகா கும்பமேளாவில் பாசி மணி விற்பவரான மோனலிசா போல்ஸ்லே என்ற பெண் மிகவும் பிரபலம் அடைந்தார்.
அவரது பிரபலத்தைப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த பாலிவுட் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பளித்தார். அதன் மூலம் சனோஜ் மிஸ்ரா அனைவரின் கவனத்தைப் பெற்றார்.
Advertisement
இந்த நிலையில், கதாநாயகியாக ஆசைப்பட்ட மற்றொரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில் சனோஜ் மிஸ்ராவை டெல்லி போலீசார் கைது செய்தனர். அவர் மீது பாலியல் வன்கொடுமை, உடல் ரீதியான தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement