செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

பாலியல் வன்முறைகளை வெளியே சொல்ல முடியாமல் பெண்கள் தவிக்கின்றனர் : வானதி சீனிவாசன்

07:45 PM Apr 09, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

தமிழகத்தில் பணிக்குச் செல்லும் பெண்களில் 90 சதவீதம் பேர் தங்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை வெளியே சொல்ல முடியாமல் தவித்து வருவதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Advertisement

சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய வானதி சீனிவாசன், ஒவ்வொரு நிறுவனத்திலும் பெண்களுக்கு எதிரான பிரச்சனைகளைக் களைய விசாகா கமிட்டி அமைக்கப்பட வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தின் உத்தரவு எனவும், மத்திய அரசின் சட்டம் என்றும் தெரிவித்தார்.

பெண்கள் அதிகளவில் வேலை செய்யும் மாநிலமான தமிழகத்தில் பணிபுரியும் பெண்களில் 90 சதவீதம் பேர் தங்களுக்கு எதிராக அரங்கேறும் பாலியல் வன்கொடுமைகளை வெளியே சொல்ல முடியாமல் தவித்து வருவதாக அவர் கூறினார்.

Advertisement

எனவே, பணிபுரியும் இடங்கள் மட்டுமல்லாது, பொது இடங்களிலும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களைத் தடுக்க மாநில அரசு சீரிய முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று வானதி சீனிவாசன் கேட்டுக் கொண்டார்.

Advertisement
Tags :
BJP MLA Vanathi Srinivasantoday TN ASSEMBLYWomen struggle to speak out about sexual violence: Vanathi SrinivasanMAINDMK
Advertisement