ஞானசேகரன் மீதான பாலியல் வழக்கு : காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
01:24 PM Feb 27, 2025 IST
|
Murugesan M
ஞானசேகரனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைத்த உத்தரவை எதிர்த்து அவரது தாயார் தாக்கல் செய்த மனு குறித்து 4 வாரங்களில் பதிலளிக்க காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Advertisement
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைத்த உத்தரவை எதிர்த்து அவரது தாய் கங்காதேவி, உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
Advertisement
அப்போது, மனு மீது நான்கு வாரங்களில் காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர்.
Advertisement