செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

பால்கனி இடிந்து விழுந்து இளைஞர் படுகாயம்!

09:34 AM Dec 23, 2024 IST | Murugesan M

சென்னை பட்டினப்பாக்கத்தில் குடிசை மாற்றுவாரிய குடியிருப்பின் பால்கனி இடிந்து விழுந்து இளைஞர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் 29 வது பிளாக் பகுதியில் வசித்து வருபவர் மோகன், எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். நேற்றிரவு வீட்டின் பால்கனியில் நின்று கொண்டிருந்த போது மூன்றாவது தளத்தின் பால்கனி இடிந்து விழுந்தது. இதில் மோகன் படுகாயமடைந்தார்.

உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து பட்டினப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

Advertisement

கடந்த 4 ஆம் தேதி இதே பகுதியில் ஜன்னல் சிலாப் இடிந்து விழுந்து இளைஞர் சையத் குலாம் (23 வயது) உயிரிழந்தார். உறவினர்கள், பொதுமக்கள் அந்த பகுதியில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Tags :
CHENNAI NEWSFEATUREDMAINThe youth was injured when the balcony collapsed!today news
Advertisement
Next Article